< Back
மாநில செய்திகள்
காமராஜர் சிலைக்கு பழனி நாடார் எம்.எல்.ஏ. மரியாதை
தென்காசி
மாநில செய்திகள்

காமராஜர் சிலைக்கு பழனி நாடார் எம்.எல்.ஏ. மரியாதை

தினத்தந்தி
|
5 Oct 2023 1:18 AM IST

சுரண்டையில் காமராஜர் சிலைக்கு பழனி நாடார் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சுரண்டை:

சுரண்டை நகர காங்கிரஸ் சார்பில் காந்தி ஜெயந்தி விழா மற்றும் காமராஜர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. சுரண்டை நகர காங்கிரஸ் தலைவர் ஜெயபால் தலைமை தாங்கினார். நகராட்சி தலைவர் ப.வள்ளிமுருகன் முன்னிலை வைத்தார். தென்காசி எம்எல்ஏ பழனி நாடார் கலந்துகொண்டு அலங்கரித்து வைக்கப்பட்ட காந்தி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். தொடர்ந்து காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். குன்னூர் மலைப்பகுதியில் நடந்த விபத்தில் பலியானவர்களுக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது பழனி நாடார் எம்.எல்.ஏ கூறுகையில், குன்னூர் மலைப்பகுதியில் விபத்தில் பலியான குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என தமிழக அரசை மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என்றார். நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகி சேர்மசெல்வம் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்