< Back
மாநில செய்திகள்
பழனி முருகன் கோவிலில்  மின் இழுவை ரெயில் சோதனை ஓட்டம்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

பழனி முருகன் கோவிலில் மின் இழுவை ரெயில் சோதனை ஓட்டம்

தினத்தந்தி
|
24 Sept 2022 12:35 AM IST

பழனி முருகன் கோவிலில் மின் இழுவை ரெயிலில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் வசதிக்காக ரோப்கார் மற்றும் மின் இழுவை ரெயில் ஆகியவை செயல்பட்டு வருகிறது. இதில் மேற்கு கிரிவீதியில் அமைந்துள்ள மின் இழுவை ரெயில் நிலையத்தில் 3 மின் இழுவை ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் 3-ம் எண் மின் இழுவை ரெயிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரோப்பில் ஏற்பட்ட பழுது காரணமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராஞ்சியில் இருந்து புதிய ரோப் கொண்டுவரப்பட்டது.

பின்னர் அதனை மின் இழுவை ரெயிலுடன் பொருத்தும் பணி நடைபெற்று வந்தது. அனைத்து பணிகளும் நிறைவு பெற்றதையொட்டி நேற்று பஞ்சாமிர்த பெட்டிகளை மின் இழுவை ரெயிலில் வைத்து சோதனை ஓட்டம் நடைபெற்றது.சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்ததையொட்டி இன்று(சனிக்கிழமை) முதல் மின் இழுவை ரெயில் பக்தர்கள் பயன்பாட்டுக்கு வரப்படுகிறது என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.


மேலும் செய்திகள்