< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
பழனி முருகன் கோவிலில் 3-வது மின் இழுவை ரெயில் - இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்தது
|24 Sept 2022 8:06 PM IST
பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மின் இழுவை ரெயில் இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்தது.
திண்டுக்கல்,
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலில், பக்தர்கள் மலைக்குச் செல்ல கம்பிவட ஊர்தி, மின் இழுவை ரெயிலை பயன்படுத்தி வருகின்றனர். இதில் 3-வது மின் இழுவை ரெயில் கடந்த சில மாதங்களுக்கு முன் பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
அந்த பணிகள் முடிவடைந்ததையடுத்து இன்று முதல் 3-வது மின் இழுவை ரெயில் பக்தர்களின் பயன்பாட்டிற்கு வந்தது. முன்னதாக ரெயிலுக்கு சந்தனம், குங்குமம் வைத்து மாலை அணிவித்து பூஜை செய்து வழிபட்டனர். பின்னர் பக்தர்களை ஏற்றி மின் இழுவை ரெயிலின் பயன்பாட்டை தொடங்கி வைத்தனர்.