< Back
மாநில செய்திகள்
பழனி முருகன் கோவில் குடமுழுக்கு: 6 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி - கோவில் நிர்வாகம் அறிவிப்பு
மாநில செய்திகள்

பழனி முருகன் கோவில் குடமுழுக்கு: 6 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி - கோவில் நிர்வாகம் அறிவிப்பு

தினத்தந்தி
|
12 Jan 2023 11:48 AM IST

பழனி முருகன் கோவில் குடமுழுக்கு விழாவை காண 6 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

திண்டுக்கல்,

பழனி முருகன் கோவில் குடமுழுக்கு விழாவை காண 6 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

பழனி முருகன் கோவிலில் வருகிற 27-ம் தேதி நடைபெறும் குடமுழுக்கு விழா குறித்த, அனைத்து துறை அலுவலர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. குடமுழுக்கு விழா காலை 8 முதல் 9.30 மணி வரை நடைபெறும் எனவும், பக்தர்கள் காலை 4 முதல் 8 மணிக்குள் மலைக் கோவிலுக்கு சென்றுவிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ரோப் கார் மற்றும் விஞ்ச் வழியாக 2 ஆயிரம் பேரும், படிவழிப்பாதை வழியாக 4 ஆயிரம் பேர் என மொத்தம் 6 ஆயிரம் பேர் அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும் குடமுழுக்கு விழாவை காண குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் மூவாயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

மேலும் செய்திகள்