< Back
மாநில செய்திகள்
பாலக்கோடு பேரூராட்சியில்  சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
தர்மபுரி
மாநில செய்திகள்

பாலக்கோடு பேரூராட்சியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தினத்தந்தி
|
4 Nov 2022 12:15 AM IST

பாலக்கோடு பேரூராட்சியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

பாலக்கோடு:

பாலக்கோடு கடை தெரு, பஸ் நிலையம், எம்.ஜி.ரோடு, தக்காளி மண்டி வரை நெடுஞ்சாலையை ஆக்கிரமிப்பு செய்து கடைகள், வணிக நிறுவனங்கள், நடைப்பாதை கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வந்தன. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் சாக்கடை கால்வாய்கள் முழுவதும் கான்கிரீட் மூலம் மூடப்பட்டுள்ளதால் அதனை சுத்தம் செய்ய முடியாமல் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசியது.

இதனால் ஆக்கிரமிப்புகளை அகற்றகோரி பொதுமக்கள் கலெக்டரிடம் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். இதையடுத்து கலெக்டர் உத்தரவின்பேரில் பேரூராட்சி தலைவர் முரளி முன்னிலையில் நேற்று பொக்லைன் எந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்புக்கள் அகற்றும் பணி நடந்தது. துப்புரவு ஆய்வாளர் ரவீந்திரன் மற்றும் தூய்மை பணியாளர்கள் போலீசார் பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். மேலும் சாலைகளை ஆக்கிரமித்து செயல்படும் வணிக நிறுவனங்கள், நடைபாதை கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர். சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சாலையை விரிவு செய்துள்ளதால் போக்குவரத்து நெரிசல் குறைந்தது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் செய்திகள்