< Back
மாநில செய்திகள்
செங்கல்பட்டு பரனூரில் உள்ள மறுவாழ்வு இல்லத்தில் வர்ணம் பூசும் பணி தீவிரம்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

செங்கல்பட்டு பரனூரில் உள்ள மறுவாழ்வு இல்லத்தில் வர்ணம் பூசும் பணி தீவிரம்

தினத்தந்தி
|
28 April 2023 3:35 PM IST

செங்கல்பட்டு பரனூரில் உள்ள மறுவாழ்வு இல்லத்தில் வர்ணம் பூசப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கள ஆய்வு பணி மேற்கொள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் செங்கல்பட்டு மாவட்டம், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள பரனூரில் உள்ள தொழுநோயாளிகளுக்கான மறுவாழ்வு இல்லத்திற்கு சென்றார். பின்னர் அங்குள்ளவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அங்கு தங்கி சிகிச்சை பெற்று வருபவர்கள் இங்குள்ள கட்டிடங்கருக்கு வர்ணம் பூச வேண்டும் என்றும் தங்குதடையின்றி குடிநீர் வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்தனர். இதையெல்லாம் பொறுமையாக கேட்டுகொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கிவிட்டு அங்கிருந்து சென்றார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவையடுத்து நேற்று காலை விடிந்ததும், விடியாததும் ஒட்டு மொத்த அரசு அதிகாரிகள் அங்கு குவிந்தனர். 100 க்கு மேற்பட்ட பெயிண்டர்கள் குவித்தனர். 30-க்கும் மேற்பட்ட ஏணிகள் குவிக்கப்பட்டன. மேலும் பொக்லைன் எந்திரங்களை கொண்டு குடிநீர் குழாய்கள் சீரமைக்கப்பட்டன.

இதனால் தொழுநோயாளிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் செய்திகள்