தஞ்சாவூர்
மாணவ-மாணவிகளுக்கு ஓவியப்பயிற்சி
|தஞ்சை அருங்காட்சியகத்தில் உலக சுற்றுலா தின விழாவையொட்டி மாணவ-மாணவிகளுக்கு ஓவியப்பயிற்சி நடைபெற்றது.
தஞ்சை அருங்காட்சியகத்தில் உலக சுற்றுலா தின விழாவையொட்டி மாணவ-மாணவிகளுக்கு ஓவியப்பயிற்சி நடைபெற்றது.
உலக சுற்றுலா தினம்
உலக சுற்றுலா தின விழாவின் ஒரு பகுதியாக தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வழிகாட்டுதலின் பேரில் தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் புவிசார் குறியீடு பெற்ற பொருட்களில் ஒன்றான தஞ்சாவூர் ஓவியம் குறித்த செய்முறை பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது.
இதில் தேசிய விருது பெற்ற ஓவியக் கலைஞர் சம்பாஜி ராஜா போன்ஸ்லே மற்றும் அவரது குழுவினர் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு ஓவியம் வரைவது குறித்து பயிற்சி அளித்தனர்.
மாணவர்களுக்கு பயிற்சி
இதில் மரப்பலகை, பருத்தித் துணி, புளியங்கொட்டை பசை கொண்டு பலகை தயாரிக்கும் பணி, தேவையான வரைபடத்தை உருவாக்குதல் எப்படி என்பது குறித்தும், வண்ண கற்கள் பதித்து மாவு வேலைப்பாடு செய்வது, தங்க இதழ் பதித்தல். வண்ணம் தீட்டி ஓவியம் வரைதல் குறித்தும் படிப்படியாக செய்து காண்பித்து பயிற்சி அளித்தனர்.
முன்னதாக இப்பயிற்சியினை இந்திய சுற்றுலா தென் மண்டல உதவி இயக்குனர் பத்மாவதி தொடங்கி வைத்தார். இதில் சுற்றுலா அலுவலர். நெல்சன், சுற்றுலா ஆலோசகர் ராஜசேகரன், தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழும ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார், கணக்கு அலுவலர் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.