< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடியில் பி.எஸ்.என்.எல் சார்பில் ஓவிய போட்டி
தூத்துக்குடி
மாநில செய்திகள்

தூத்துக்குடியில் பி.எஸ்.என்.எல் சார்பில் ஓவிய போட்டி

தினத்தந்தி
|
22 Sept 2023 12:15 AM IST

தூத்துக்குடியில் பி.எஸ்.என்.எல் சார்பில் ஓவிய போட்டி சனிக்கிழமை நடக்கிறது.

தூத்துக்குடி பி.எஸ்.என்.எல். பொதுமேலாளர் பிஜி பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தூத்துக்குடி பி.எஸ்.என்.எல் சார்பில் நாளை (சனிக்கிழமை) பள்ளி மாணவர்களுக்கான ஓவிய போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டி தூத்துக்குடி செயின்ட் தாமஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பிஎஸ்என்எல் பாரத் பைபர் பயன்படுத்தி ஸ்மார்ட் கல்வி கற்றல்' என்ற தலைப்பில் நடக்கிறது. ஓவிய போட்டியில் தூத்துக்குடி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் உள்ள பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 6-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம் என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்