< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
மாணவ-மாணவிகளுக்கு ஓவிய போட்டி
|23 Nov 2022 1:00 AM IST
மாணவ-மாணவிகளுக்கு ஓவிய போட்டி நடந்தது.
மீன்சுருட்டி:
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் நடைபெற்று வரும் உலக மரபு வார விழாவையொட்டி நேற்று கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு ஓவிய போட்டி நடந்தது. இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு தொல்லியல் அலுவலர் பிரபாகரன் தலைமை தாங்கினார். இதில் 33 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர். தேசிய கொடி, தேசிய பறவை, இயற்கை வளங்கள், தண்ணீர் சேமிப்பு, சிற்பங்கள் போன்றவற்றை அவர் ஓவியமாக வரைந்தனர்.