< Back
மாநில செய்திகள்
மாணவர்களுக்கு ஓவிய போட்டி
திண்டுக்கல்
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு ஓவிய போட்டி

தினத்தந்தி
|
24 July 2022 10:31 PM IST

பழனியில் உலக பெற்றோர் தினத்தையொட்டி மாணவர்களுக்கு ஓவிய போட்டி நடந்தது.

உலக பெற்றோர் தினத்தையொட்டி பழனி அடிவாரம் பகுதியில் மாணவர்களுக்கு ஓவிய போட்டி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஓவிய ஆசிரியர் சின்னப்பா தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பழனி பகுதியை சேர்ந்த மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர். பின்னர் ஓவிய ஆசிரியர் பேசுகையில், பெற்றோர் நமக்காக செய்த தியாகம், உழைப்பு ஆகியவை குறித்து பேசினார். தொடர்ந்து மாணவர்களுக்கு, தங்களின் பெற்றோரை ஓவியமாக வரையும் போட்டி நடைபெற்றது. இதில் மாணவர்கள் தங்களின் தாய், தந்தை மற்றும் தாத்தா, பாட்டி ஆகியோரின் உருவத்தை வரைந்தனர். முடிவில் சிறப்பாக ஓவியம் வரைந்த மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்