விருதுநகர்
மாணவ-மாணவிகளுக்கு ஓவியப்போட்டி
|விருதுநகரில் அரசு அருங்காட்சியத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஓவியப்போட்டி 14-ந் தேதி நடக்கிறது.
விருதுநகரில் அரசு அருங்காட்சியத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஓவியப்போட்டி 14-ந் தேதி நடக்கிறது.
ஓவியப்போட்டி
விருதுநகர் அரசு அருங்காட்சியகத்தில் சுதந்திரதினத்தைெயாட்டி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இந்திய நாட்டின் சுதந்திரத்திற்கு பாடுபட்ட தேசத்தலைவர்கள் மற்றும் சுதந்திர போராட்டத்தின் நிகழ்வுகளை நினைவு கொள்ளும் வகையிலும் மேலும் தங்கள் தனி திறன்களை வெளிப்படுத்தி ஊக்குவிக்கும் வகையிலும் பிளஸ்-1 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. பயிலும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஓவியப்போட்டி வருகிற 14-ந் தேதி நடைபெறுகிறது. போட்டியில் ஓவியங்கள் இந்திய சுதந்திர போராட்டம் தொடர்பான கருப்பொருளில் அமைய வேண்டும். பிளஸ்-1 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகள் கலந்து கொள்ளலாம்.
போட்டி ஒரே பிரிவாக நடத்தப்படும். ஒரு பள்ளியில் இருந்து அதிகபட்சமாக 3 பேர் மட்டுமே கலந்து கொள்ளலாம். ஓவியம் வரைவதற்கான பேப்பர் அருங்காட்சியகத்தில் வழங்கப்படும்.
பதிவு செய்யலாம்
ஓவியங்களை வைத்து வரைவதற்கான அட்டை மற்றும் வண்ணங்கள், வண்ண பென்சில்கள் போன்றவற்றை மாணவர்கள் கொண்டு வர வேண்டும். ஓவியம் வரைய காலை 10 மணி முதல் 11.30 மணி வரை கால அவகாசம் வழங்கப்படும்.
வெற்றி பெறும் மாணவ-மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழும் போட்டி நடைபெறும் அன்றே நடக்கும் பரிசளிப்பு விழாவில் வழங்கப்படும். பங்குபெறும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். கலந்து கொள்ள விரும்பும் பள்ளி மாணவ- மாணவிகள் பெயர்களை நேரிலோ அல்லது 99944 59521 என்ற செல்போனின் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமோ வருகிற 13-ந் தேதி மாலை 5 மணிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேற்கண்ட தகவலை அருங்காட்சியக காப்பாட்சியர் டாக்டர் பால்துரை தெரிவித்துள்ளார்.