< Back
மாநில செய்திகள்
மாணவ-மாணவிகளுக்கு ஓவிய போட்டி
நீலகிரி
மாநில செய்திகள்

மாணவ-மாணவிகளுக்கு ஓவிய போட்டி

தினத்தந்தி
|
19 July 2023 7:30 PM GMT

மாணவ-மாணவிகளுக்கு ஓவிய போட்டி

குன்னூர்

நீலகிரி மாவட்டத்தில் மனித-வனவிலங்கு மோதலை தடுக்க வனத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக குன்னூரில் உள்ள அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளியில் வனத்துறையினர் சார்பில் மனித-வனவிலங்கு மோதல் தடுப்பு குறித்த ஓவிய போட்டி நடைபெற்றது. இதில் சிறப்பாக ஓவியங்கள் வரைந்து வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு வனச்சரகர் ரவீந்திரநாத் சான்றிதழ்கள் மற்றும் கோப்பைகளை வழங்கினார். பின்னர் அவர் பேசும்போது, சமீப காலமாக வனப்பகுதிகளை ஒட்டிய இடங்களில் கட்டிடங்கள் அதிகம் கட்டப்பட்டு வருவதால் வனவிலங்குகள் இடம் பெயர்ந்து ஊருக்குள் வருகிறது. இதனால் மனித-வனவிலங்கு மோதல் ஏற்படுகிறது. எனவே அங்கு புதிய கட்டிடங்கள் கட்டுவதை தவிர்த்து மரங்களை அதிகளவில் வளர்க்க வேண்டும் என்றார்.

மேலும் செய்திகள்