< Back
மாநில செய்திகள்
பள்ளி மாணவர்களுக்கு ஓவிய போட்டி
நீலகிரி
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு ஓவிய போட்டி

தினத்தந்தி
|
9 Oct 2023 12:45 AM IST

கூடலூரில் பள்ளி மாணவர்களுக்கு ஓவிய போட்டி நடந்தது.

கூடலூர் கல்வி மாவட்ட தேசிய பசுமை படை, சி.பி.ஆர். சுற்றுச்சூழல் கல்வி மையம், சுற்றுச்சூழல் மன்றங்கள் சார்பில், வன உயிரின வார விழாவையொட்டி கூடலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 6 முதல் 11-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு ஓவிய போட்டி நடந்தது. கூடலூர் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட 15 பள்ளிகளை சேர்ந்த 49 மாணவர்கள் கலந்துகொண்டனர். வனவிலங்குகளை பாதுகாப்போம், விலங்குகளுக்கு எவ்வாறு பாதிப்புகள் ஏற்படுகிறது என்ற தலைப்பில் ஓவிய போட்டி நடத்தப்பட்டது. மாணவர்கள் வரைந்த ஓவியங்கள் தேர்வு செய்யப்பட்டு, சிறந்த ஓவியங்களுக்கான பரிசுகள் வழங்கப்பட உள்ளது. தொடர்ந்து கூடலூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. இதில் இயற்கை காட்சிகள், பறவைகள், பழங்குடியின மக்களின் கலாசாரங்கள் அடங்கிய புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. இதனை ஏராளமான பள்ளி மாணவ-மாணவிகள் கண்டு ரசித்தனர். ஓவிய போட்டி, புகைப்பட கண்காட்சிக்கு பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ராபர்ட் முன்னிலை வகித்தார். இதற்கான ஏற்பாடுகளை சுற்றுச்சூழல் கல்வி மைய கள அலுவலர் குமாரவேலு செய்திருந்தார்.

மேலும் செய்திகள்