< Back
மாநில செய்திகள்
பி.எஸ்.என்.எல்.சார்பில்பள்ளி மாணவர்களுக்கான ஓவியப்போட்டி
கடலூர்
மாநில செய்திகள்

பி.எஸ்.என்.எல்.சார்பில்பள்ளி மாணவர்களுக்கான ஓவியப்போட்டி

தினத்தந்தி
|
24 Sep 2023 6:45 PM GMT

பி.எஸ்.என்.எல்.சார்பில் பள்ளி மாணவர்களுக்கான ஓவியப்போட்டிட நடைபெற்றது.


பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் 24-வது அமைப்பு தினத்தை முன்னிட்டு கடலூர் பி.எஸ்.என்.எல். சார்பில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையுள்ள பள்ளி மாணவ- மாணவிகளுக்கான ஓவியப்போட்டி கிருஷ்ணசாமி மெட்ரிக் பள்ளியில் நேற்று நடந்தது. பி.எஸ்.என்.எல். அதிவேக இணைய தள சேவை பற்றிய தலைப்பில் நடந்த இந்த ஓவிய போட்டியை கடலூர் துணை பொது மேலாளர் முரளிதரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பள்ளி முதல்வரும், கல்வியாளருமான ஆயிஷா நடராஜன், முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்க மாவட்ட செயலாளர் பால்கி முன்னிலை வகித்தனர்.

இந்த போட்டியில் கடலூர் மாநகரத்தை சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு, ஓவியம் வரைந்தனர். போட்டியையொட்டி சிறப்பு மேளா நடந்தது. இதில் இலவசமாக வழங்கப்பட்ட 4 ஜி சிம்கார்டுகளையும், சிறப்பு சலுகையுடன் வழங்கப்பட்ட எப்.டி.டி.எச். இணைப்புகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச்சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை உதவி பொது மேலாளர்கள் ஜெயலால், சுமா, சசிகலா மற்றும் பொது மேலாளர் அலுவலகம், தொலைபேசி நிலையம், வாடிக்கையாளர் சேவை மையங்களில் பணியாற்றி வரும் இளநிலை பொறியாளர்கள், ஊழியர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்