< Back
மாநில செய்திகள்
பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஓவியப்போட்டி
வேலூர்
மாநில செய்திகள்

பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஓவியப்போட்டி

தினத்தந்தி
|
18 July 2023 6:25 PM IST

வேலூரில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஓவியப்போட்டி நடந்தது.

தென்னக பண்பாட்டு மையம் (தஞ்சாவூர்), மத்திய கலாசார துறை, தொல்லியல்துறை ஆகியவை சார்பில் 75-வது சுதந்திர தின அமுதபெருவிழா நிறைவையொட்டி வேலூரில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

ஊர்வலத்துக்கு கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் சுஜாதா ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர். மத்திய கலாசார துறை அதிகாரி அன்குஷ்ரத்தோகி முன்னிலை வகித்தார்.

ஊர்வலம் கோட்டை பூங்காவில் இருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோட்டை பூங்காவில் நிறைவடைந்தது.

இதில் கோட்டை கண்காணிப்பாளர் (பொறுப்பு) அகல்யா, நிகழ்ச்சி அலுவலர் ரவிந்திரகுமார் மற்றும் மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதனிடையே மாணவ- மாணவிகளுக்கான ஓவியப்போட்டி கோட்டை பூங்காவில் நடந்தது. இதில் மாணவ- மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. மாலையில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

மேலும் செய்திகள்