< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
சிறைவாசிகளுக்கான ஓவியப்போட்டி
|18 Nov 2022 12:00 AM IST
சிறைவாசிகளுக்கான ஓவியப்போட்டி நடந்தது.
கரூர் மாவட்ட பொது நூலகத்துறை சார்பில் 55-வது தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு சிறைவாசிகளுக்கான ஓவியப்போட்டி நேற்று கரூர் தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள கிளைச்சிறையில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட மைய நூலகர் சிவக்குமார் தலைமை தாங்கினார். ஓவிய ஆசிரியர் கலைமுதுமணி துரைராஜ் ஓவியப்போட்டி குறித்து கருத்துரை வழங்கி நடுவராக செயல்பட்டார். கிளைச்சிறை கண்காணிப்பாளர் அருணாச்சலம் ஓவியப்போட்டியை தொடங்கி வைத்து, வாழ்த்துரை வழங்கினார். இந்த ஓவியப்போட்டியில் 51 பேர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.