< Back
மாநில செய்திகள்
கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான ஓவிய போட்டி
ஈரோடு
மாநில செய்திகள்

கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான ஓவிய போட்டி

தினத்தந்தி
|
25 July 2023 10:25 PM GMT

கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான ஓவிய போட்டி நடந்தது.

மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் சார்பில் அரசின் நலத்திட்ட புகைப்பட கண்காட்சி ஈரோடு பஸ் நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. 2-வது நாளான நேற்று காலை கல்லூரி மாணவ- மாணவிகளுக்கான ஓவிய போட்டி நடந்தது. இதில் 41 மாணவ- மாணவிகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தி ஓவியங்களை வரைந்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.2 ஆயிரத்து 500, 2-வது பரிசாக ரூ.1,500, 3-வது பரிசாக ரூ.1,000, ஆறுதல் பரிசாக 2 பேருக்கு தலா ரூ.500 வழங்கப்பட்டன. அதைத்தொடர்ந்து தொழில் மற்றும் ஆளுமை வளர்ச்சி குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. இதில் தனியார் போட்டித்தேர்வு பயிற்சி மையத்தின் இயக்குனர் தியாகராஜன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், அரசு துறையில் உள்ள வேலை வாய்ப்புகள், அதற்கான போட்டித்தேர்வுகள், அதற்கு தயாராகும் விதம் குறித்து விளக்கினார்.

இந்த கருத்தரங்கில் தர்மபுரி மத்திய மக்கள் தொடர்பு கள விளம்பர அதிகாரி பிபின் எஸ்.நாத் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்