< Back
மாநில செய்திகள்
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் இன்று ஓவியப்போட்டி
திருநெல்வேலி
மாநில செய்திகள்

கேந்திரிய வித்யாலயா பள்ளியில் இன்று ஓவியப்போட்டி

தினத்தந்தி
|
23 Jan 2023 2:15 AM IST

தெற்கு விஜயநாராயணம் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் இன்று ஓவியப்போட்டி நடக்கிறது.

இட்டமொழி:

மாணவர்கள் பயமின்றி தேர்வை எதிர்கொள்ள வேண்டும் எனும் பிரதமர் நரேந்திர மோடியின் சிந்தனையை தலைப்பாக கொண்டு எழுதப்பட்ட எக்ஸாம் வாரியர்ஸ் எனும் நூலை மையமாக வைத்து வழங்கப்படும் தலைப்பின்கீழ் நாடு முழுவதும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 500 பல்வேறு கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒவ்வொரு பள்ளியிலும் 100 மாணவர்கள் பங்கு பெறும் ஓவியப் போட்டி இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.

அதன்படி தெற்கு விஜயநாராயணத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியிலும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாளான இன்று (திங்கட்கிழமை) ஓவியப்போட்டி நடைபெறுகிறது. இதில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பங்கேற்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் ராகேஷ் செய்துள்ளார்.

மேலும் செய்திகள்