< Back
மாநில செய்திகள்
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான ஓவிய போட்டி
சிவகங்கை
மாநில செய்திகள்

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான ஓவிய போட்டி

தினத்தந்தி
|
12 Nov 2022 12:15 AM IST

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான ஓவிய போட்டி நடைபெறுகிறது.

சிவகங்கையில் உள்ள பாரதி இசை கல்வி கழகம் சார்பில் மகாகவி பாரதியாரின் பிறந்தநாளை முன்னிட்டு மாநில அளவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான ஓவிய போட்டி இன்று(சனிக்கிழமை) சிவகங்கை, திருப்பத்தூர், தேவகோட்டை, மானாமதுரை ஆகிய 4 இடங்களில் நடைபெறுகிறது. சிவகங்கையில் மன்னர் மேல்நிலைப்பள்ளியிலும் மானாமதுரையில் ஒ.வெ.ச. மேல்நிலைப்பள்ளியிலும், திருப்பத்தூரில் ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், தேவகோட்டையில் டி.பிரிட்டோ மேல்நிலைப்பள்ளியிலும் போட்டிகள் நடைபெறும்.

போட்டியில் கலந்து கொள்பவர்கள் பாரதியின் கவிதை வரிகளை ஓவியமாக வரைய வேண்டும். இதில் சிறந்ததாக தேர்வு செய்யப்படும் 140 ஓவியங்களுக்கு சான்றிதழ் மற்றும் விருது வழங்கப்படும். இத்தகவலை பாரதி இசை கல்வி கழகத்தின் நிறுவனர் யுவராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்