< Back
மாநில செய்திகள்
மாணவ-மாணவிகளுக்கு ஓவிய, கட்டுரை போட்டி
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

மாணவ-மாணவிகளுக்கு ஓவிய, கட்டுரை போட்டி

தினத்தந்தி
|
14 Oct 2023 1:30 AM IST

வால்பாறை அரசு ஆண்கள் பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு ஓவிய, கட்டுரை போட்டி நடத்தப்பட்டது.

வால்பாறை


வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போலீசார் சார்பில் குட்டி காவலன் என்ற தலைப்பில் விழிப்புணர்வு ஒவிய, கட்டுரை போட்டி நடத்தப்பட்டது.

பள்ளி தலைமையாசிரியர் சிவன்ராஜ் முன்னிலையில் நடைபெற்ற ஓவிய போட்டியில் 32 மாணவர்கள், கட்டுரை போட்டியில் 11 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) பரிசு வழங்கப்பட உள்ளது.

இது குறித்து போலீஸ் சப் -இன்ஸ் பெக்டர் முருகநாதன் கூறுகையில் மாணவ-மாணவிகளிடம் சமுதாய அக்கறை, சட்டம் ஒழுங்கு, பாலியல் குற்றங்கள் தடுப்பு, போக்குவரத்து விதிகளை கடைபிடித்தல் போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் ஓவியம் மற்றும் கட்டுரை போட்டி நடத்தப்பட்டது என்றார்.

இதற்கான ஏற்பாடுகளை வால்பாறை போலீசார் மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்