< Back
மாநில செய்திகள்
பெயிண்டருக்கு 20 ஆண்டு ஜெயில் செங்கல்பட்டு போக்சோ கோர்ட்டு தீர்ப்பு
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

பெயிண்டருக்கு 20 ஆண்டு ஜெயில் செங்கல்பட்டு போக்சோ கோர்ட்டு தீர்ப்பு

தினத்தந்தி
|
26 July 2023 12:23 PM IST

பெயிண்டருக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து செங்கல்பட்டு போக்சோ கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.

செங்கல்பட்டு,

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த புத்தளி கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்ஜித் குமார் (28). பெயிண்டராக பணியாற்றி வருகிறார். கடந்த 2020- ம் ஆண்டு ரஞ்சித் குமார் 7 வயது சிறுமிக்கு சாக்லெட் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி ஏரிக்கரைக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டார்.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் அனைத்து மகளிர்போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். ரஞ்சித்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு செங்கல்பட்டு போக்சோ சிறப்பு கோர்ட்டில் இந்த வழக்கு நடைபெற்று வந்தது. தொடர்ந்து விசாரணை செய்ததில் ரஞ்சித்குமார் செய்த குற்றங்கள் அனைத்தும் உறுதியானதால் அவருக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து செங்கல்பட்டு போக்சோ சிறப்பு கோர்ட்டு நீதிபதி தமிழரசி தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக ரூ.3 லட்சத்தை தமிழக அரசு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். அரசு தரப்பில் வக்கீல் புவனேஷ்வரி ஆஜரானார்.

மேலும் செய்திகள்