< Back
மாநில செய்திகள்
மின்சாரம் தாக்கி பெயிண்டர் பலி
வேலூர்
மாநில செய்திகள்

மின்சாரம் தாக்கி பெயிண்டர் பலி

தினத்தந்தி
|
30 Sept 2023 8:14 PM IST

பேரணாம்பட்டில் மின்சாரம் தாக்கி பெயிண்டர் பலியானார்.

பேரணாம்பட்டு டவுன் கலைஞர் நகரை சேர்ந்தவர் ஜான் பீட்டர் (வயது 33), பெயிண்டர். இவர் ரஹமதாபாத்தில் உள்ள இர்பான் என்பவருடைய வீட்டில் தொழிலாளர்களுடன் பெயிண்டு அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். மாடி சுவற்றில் கட்டையில் உட்கார்ந்தபடி பெயிண்டு அடித்த அவர் கயிறு மூலம் சுவற்றின் கீழ் பகுதிக்கு இறங்கி வந்தபோது எதிர்பாராத விதமாக சுவற்றின் பக்கவாட்டில் இருந்த உயர் அழுத்த மின் கம்பி உரசி ஜான்பீட்டரை மின்சாரம் தாக்கியது.

இதில் சுமார் 20 அடி உயரத்திலிருந்து கீழே தூக்கி வீசப்பட்டார். உடனடியாக அவரை மீட்டு பேரணாம்பட்டு அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஜான் பீட்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது சம்பந்தமாக பேரணாம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மின்சாரம் தாக்கி உயிரிழந்த ஜான் பீட்டருக்கு மனைவி துர்காதேவி (28), விஷால் (5) என்ற ஆண் குழந்தையும், சிவயோ என்ற 5 மாத குழந்தையும் உள்ளனர்.

மேலும் செய்திகள்