< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த பெயிண்டர் கைது - 14 சவரன் நகைகள் பறிமுதல்
|19 Feb 2024 3:00 AM IST
மேட்டுக்கடை பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது வீட்டில் புகுந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த மூன்றரை சவரன் தங்க நகையை, மர்மநபர் திருடிச் சென்றார்.
ஈரோடு,
ஈரோடு அருகே, தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த பெயிண்டரை போலீசார் கைது செய்தனர். மேட்டுக்கடை பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது வீட்டில் புகுந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த மூன்றரை சவரன் தங்க நகையை, மர்மநபர் திருடிச் சென்றார்.
இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியபோது, சந்தேகத்தின் பேரில், பெருந்துறையை சேர்ந்த பெயிண்டர் உதயகோபாலா ராஜா என்கிற சுபாஷ் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில், கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து அவரிடம் இருந்து சுமார் 14 சவரன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.