திருவள்ளூர்
போலீசில் பாட்டி புகார் செய்ததால் பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை
|போலீசில் பாட்டி புகார் செய்ததால் பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
ஆவடியை அடுத்த கொள்ளுமேடு ஒண்டி தெருவை சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 22). பெயிண்டர். பெற்றோரை இழந்த இவர், சிறுவயதில் இருந்தே தனது பாட்டி வசந்தா (65) வீட்டில் வளர்ந்து வந்தார். அடிக்கடி பிரசாந்த் மது அருந்தி விட்டு பாட்டியிடம் தகராறில் ஈடுபடுவார் என கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் பிரசாந்த் வழக்கம்போல் மது போதையில் பாட்டியிடம் தகராறில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த வசந்தா, ஆவடி டேங்க் பேக்டரி போலீஸ் நிலையத்தில், தனது பேரன் குடித்து விட்டு தன்னிடம் தகராறில் ஈடுபடுகிறான் என புகார் கூறினார்.
இதுபற்றி விசாரிக்க பிரசாத்தை தேடி போலீசார் வீட்டுக்கு வந்தனர்.
வீட்டின் கதவு உள்தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பிரசாந்த் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டிருப்பது தெரிந்தது. போலீசில் பாட்டி புகார் செய்ததால் பயந்துபோய் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என தெரிகிறது. இதுபற்றி ஆவடி டேங்க்பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.