< Back
மாநில செய்திகள்
ரெயில்வே தண்டவாளம் அருகே பிணமாக கிடந்த பெயிண்டர்
கரூர்
மாநில செய்திகள்

ரெயில்வே தண்டவாளம் அருகே பிணமாக கிடந்த பெயிண்டர்

தினத்தந்தி
|
10 Dec 2022 11:53 PM IST

ரெயில்வே தண்டவாளம் அருகே பெயிண்டர் பிணமாக கிடந்தார்.

கரூர் காந்திகிராமம் அருகே உள்ள தமிழ்நகர் ெரயில்வே தண்டவாளம் அருகே 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடப்பதாக கரூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் அவர் யார்? என்று விசாரணை நடத்தினர். விசாரணையில், இறந்து கிடப்பது வெள்ளியணை அருகே உள்ள பிச்சம்பட்டியை சேர்ந்த பெயிண்டர் அன்புச்செல்வன் (வயது 42) என்பதும், தூளிபட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து வந்தவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து கரூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிந்து, அன்புச்செல்வன் தண்டவாளத்தை கடக்கும்போது ரெயில் மோதி இறந்தாரா? அல்லது யாரேனும் கொலை செய்து உடலை வீசி சென்றார்களா? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்