ஆரணி அருகே வாழ்க்கையில் விரக்தி அடைந்த பெயிண்டர் விஷம் குடித்து பரிதாப சாவு
|ஆரணி அருகே வாழ்க்கையில் விரக்தி அடைந்த பெயிண்டர் விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி திருவள்ளுவர் தெருவை சேர்ந்த உமாபதி (வயது 27). இவர் பெயிண்டராக வேலை செய்து வருகிறார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சாலை விபத்தில் படுகாயம் அடைந்து, இதனால் வேலைக்கு செல்ல முடியாத சூழ்நிலையும் வலி அதிகமாகவே மது அருந்தும் பழக்கம் ஏற்பட்டுள்ளது .
இதனால் தொடர்ந்து வேலைக்கு போகாததால் மது அருந்தும் பழக்கத்தில் இருந்த உமாபதி மதுவுடன் விஷம் கலந்து குடித்ததாக தெரிய வருகிறது.
ஆரணி அடுத்த பையூர் எம்ஜிஆர் நகர் பகுதியில் வாயில் நுரை தள்ளிய நிலையில் விழுந்து கிடப்பதாக மனைவி மேனகாவுக்கு தகவல் கிடைத்ததின் பெயரில், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக உமாபதியை ஆரணி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு மருத்துவர்கள் பரிசோதித்ததில் உமாபதி இறந்து விட்டதாக உறுதி செய்து தெரிவித்தனர். ஆரணி தாலுகா போலீசில் மனைவி மேனகா கொடுத்த புகாரின் பேரில் ஆரணி தாலுகா போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெயப்பால் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார். இறந்த உமாபதிக்கு சாகானா (6) ரித்திக்(3 1/2) அதித்தியா, அனன்யா(2 1/2) என்ற நான்கு குழந்தைகள் உள்ளனர்.