கன்னியாகுமரி
நாகர்கோவிலில்கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த பெயிண்டர் சாவு
|நாகர்கோவிலில்கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த பெயிண்டர் பரிதாபமாக இறந்தார்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் வடசேரி ஆசாரிமார் தெரு பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி என்ற செந்தில்குமார் என்ற பஜார் (வயது37). பெயிண்டரான இவர் சம்பவத்தன்று நாகர்கோவில் டதி பள்ளி அருகில் உள்ள ஒரு வீட்டில் பெயிண்டிங் வேலைக்கு சென்றார். அங்கு கட்டிடத்தின் மேல் பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த போது எதிர்பாராமல் தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை அருகில் நின்றவர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி நேற்று மதியம் இறந்தார்.
இதுகுறித்து அவருடைய மைத்துனர் கிருஷ்ணன்கோவில் எம்.எஸ்.ரோடு பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் (48) கொடுத்த புகாரின்பேரில் வடசேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் ஜெசி மேனகா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.