< Back
தமிழக செய்திகள்

கிருஷ்ணகிரி
தமிழக செய்திகள்
வாகனம் மோதி பெயிண்டர் பலி

30 July 2022 11:26 PM IST
பர்கூர் அருகே வாகனம் மோதி பெயிண்டர் இறந்தார்.
பர்கூர்
பர்கூர் அருகே உள்ள அங்கிநாயனப்பள்ளியை சேர்ந்தவர் வடிவேல் (வயது 42). பெயிண்டர். இவர் அங்கிநாயனப்பள்ளி மேல் கொட்டாய் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த வடிவேல் சம்பவ இடத்திலேயே இறந்தார். அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து பர்கூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.