சேலம்
தாரமங்கலம் அருகேசரபங்கா நதியில் பெயிண்டர் பிணம்எப்படி இறந்தார்? போலீஸ் விசாரணை
|தாரமங்கலம் அருகே சரபங்கா நதியில் பெயிண்டர் பிணமாக கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
தாரமங்கலம்,
நதியில் பிணம்
தாரமங்கலம் அருகே பாப்பம்பாடி கரட்டூர் பகுதியில் சரபங்கா நதியில் நேற்று காலை ஆண் பிணம் ஒன்று மிதந்தது. இதுபற்றி பாப்பம்பாடி கிராம நிர்வாக அலுவலர் ரவிச்சந்திரன் தாரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன், சப்-இன்ஸ்பெக்டர்கள் முரளிதரன், காமராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். ஆற்றில் மிதந்த உடலை கயிறு கட்டி மீட்டனர். அவர் அணிந்து இருந்த பேண்ட் பையில் சோதனை செய்தனர். அதில் இருந்த அடையாள அட்டைகளை கொண்டு அவர் அடையாளம் காணப்பட்டார்.
பெயிண்டர்
அதாவது, பிணமாக கிடந்தவர் சேலம் எருமாபாளையம் களரம்பட்டி பகுதியை சேர்ந்த சுப்ரமணி மகன் சங்கர் (வயது 38). பெயிண்டர். திருமணம் ஆகாத இவர், கடந்த 2 ஆண்டுகளாக குடும்பத்தை பிரிந்து வாழ்ந்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது.
மேலும் அவர், ஆற்றில் குளிக்கும் போது தவறி விழுந்து இறந்தாரா அல்லது மதுபோதையில் ஆற்றில் விழுந்து இறந்தாரா என்பது குறித்து தாரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தினர்.