< Back
மாநில செய்திகள்
மகள் திருமணத்திற்கு பணம் இல்லாததால் விரக்தி - பெயிண்டர் தற்கொலை
சென்னை
மாநில செய்திகள்

மகள் திருமணத்திற்கு பணம் இல்லாததால் விரக்தி - பெயிண்டர் தற்கொலை

தினத்தந்தி
|
19 Sept 2022 11:49 AM IST

கோடம்பாக்கத்தில் மகள் திருமணத்திற்கு பணம் இல்லாததால் விரக்தியடைந்த பெயிண்டர் தற்கொலை செய்துகொண்டார்.

கோடம்பாக்கம்:

சென்னை கோடம்பாக்கம் பாரதீஸ்வரர் காலனியை சேர்ந்தவர் பூபாலன் (வயது50) பெயிண்டராக வேலை பார்த்து வந்தார் இவருக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர்.

பூபாலன் மகளுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது இந்த நிலையில் மகளின் திருமணத்திற்கு போதிய பணம் இல்லாமல் பூபாலன் தவித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மன வேதனை அடைந்த அவர் நேற்று இரவு திடீரென வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்