< Back
மாநில செய்திகள்
அருமனை அருகே பெயிண்டர் விஷம் குடித்து தற்கொலை
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

அருமனை அருகே பெயிண்டர் விஷம் குடித்து தற்கொலை

தினத்தந்தி
|
7 May 2023 12:26 AM IST

அருமனை அருகே பெயிண்டர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

அருமனை:

அருமனை அருகே உள்ள அண்டுகோடு வட்டவிளையை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது42). இவர் களியக்காவிளையில் ஒரு ஒர்க் ஷாப்பில் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மது பழக்கம் உண்டு எனக்கூறப்படுகிறது. நேற்று முன்தினம் மது குடிக்க மனைவியிடம் பணம் கேட்டார். ஆனால் பணம் கிடைக்கவில்லை. இதனால் மனமுடைந்த மணிகண்டன் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு மேல்புறத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் அருமனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்