< Back
மாநில செய்திகள்
பெயிண்டர் விஷம் குடித்து தற்கொலை
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

பெயிண்டர் விஷம் குடித்து தற்கொலை

தினத்தந்தி
|
16 April 2023 12:15 AM IST

தக்கலை அருகே பெயிண்டர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

குளச்சல்:

தக்கலை அருகே பெயிண்டர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

குளச்சல் அருகே உள்ள மேற்கு நெய்யூரை சேர்ந்தவர் பிரவின்குமார் (வயது 39), பெயிண்டர். இவருடைய மனைவி சந்திரா (27). இருவருக்கும் திருமணமாகி 2 வருடங்கள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. பிரவின்குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில், நேற்று காலை வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே உறவினர்கள் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் குளச்சல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்