< Back
மாநில செய்திகள்
சிகரெட் பிடித்தபடி மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோல் எடுக்க முயன்ற பெயிண்டர் உடல் கருகி சாவு
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

சிகரெட் பிடித்தபடி மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோல் எடுக்க முயன்ற பெயிண்டர் உடல் கருகி சாவு

தினத்தந்தி
|
2 Oct 2023 4:58 PM IST

சிகரெட் பிடித்தபடி மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோல் எடுக்க முயன்ற பெயிண்டர் உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.

பெட்ரோல் எடுக்க முயன்றார்

செங்கல்பட்டு மாவட்டம் தாழம்பூர் எல்லைக்குட்பட்ட வேங்கடமங்கலம் ஜி.வி.கார்டன் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 55). இவர் குடும்பத்துடன் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். பெயின்டிங் வேலை செய்து வரும் இளங்கோவன் மது பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் மாலை மதுபோதையில் இருந்த இளங்கோவன் சிகரெட் பிடித்து கொண்டு தன்னுடைய மோட்டார் சைக்கிளில் இருந்து டியூப் போட்டு உறிஞ்சி பெட்ரோலை எடுக்க முயன்றார்.

சாவு

அப்போது எதிர்பாராத விதமாக திடீரென தீப்பிடித்ததில் இளங்கோவன் மீது தீ பரவியது. அவரது அலறல் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் மற்றும் குடும்பத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.பின்னர் அவரை சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு இளங்கோவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தாழம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்