< Back
மாநில செய்திகள்
எருமப்பட்டி அருகே  முதியவரை வெட்டிய பெயிண்டர் கைது
நாமக்கல்
மாநில செய்திகள்

எருமப்பட்டி அருகே முதியவரை வெட்டிய பெயிண்டர் கைது

தினத்தந்தி
|
26 May 2022 9:01 PM IST

எருமப்பட்டி அருகே முதியவரை வெட்டிய பெயிண்டர் கைது

எருமப்பட்டி:

எருமப்பட்டி அருகே உள்ள பொன்னேரி கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன் (வயது 60). கூலித்தொழிலாளி. இவருக்கும், அதே ஊரை சேர்ந்த பெயிண்டரான சுரேஷ் (28) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பொன்னேரி மாரியம்மன் கோவில் திருவிழா நிறைவு பெற்று சாமி கிணற்றுக்கு எடுத்து செல்லும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொண்ட சுரேஷ் அங்கு நின்ற நடராஜனை முன்விரோதத்தை மனதில் வைத்து தகராறு செய்தாராம்.

அப்போது தகராறு முற்றியதில் ஆத்திரமடைந்த சுரேஷ் அங்கிருந்த ஆடு வெட்டும் கத்தி எடுத்து நடராஜனை வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த நடராஜனை அங்கிருந்தவர்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நடராஜன் கொடுத்த புகாரின்பேரில் எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேசை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்