கள்ளக்குறிச்சி
உலகளந்த பெருமாள் கோவிலில் பகல் பத்து உற்சவம்
|திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு விழாவை முன்னிட்டு பகல் பத்து உற்சவம் வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது
திருக்கோவிலூர்
சொர்க்கவாசல் திறப்பு
ஆன்மிகத்தில் பிரசித்தி பெற்றதும், வரலாற்று சிறப்பு வாய்ந்ததுமான திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் சொர்க்கவாசல் திறப்பு விழா எனப்படும் வைகுந்த வாசல் திறப்பு விழா நிகழ்ச்சி அடுத்த மாதம்(ஜனவரி) 2-ந் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு வருகிற 23-ந் தேதி வெள்ளிக்கிழமை முதல் பகல் பத்து உற்சவம் தொடங்கி. அடுத்த மாதம் 1-ந் தேதி முடிவடைகிறது.
இதைத் தொடர்ந்து மறுநாள் இராப்பத்து உற்சவம் வைகுந்தவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு விழா நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. அன்று அதிகாலை 5 மணி அளவில் நடைபெறும் சொர்க்கவாசல் திறப்பு விழா நிகழ்ச்சியில் திருக்கோவிலூர் மட்டுமின்றி கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்கின்றனர். ராப்பத்து உற்சவம் வருகிற 12-ந் தேதி வரை நடக்கிறது.
அத்தியாயன உற்சவம்
பின்னர் வருகிற 13-ந் தேதி முதல் ஸ்ரீ புஷ்பவல்லி தாயார் அத்தியாயன உற்சவம் தொடங்கி 24-ந் தேதி வரை நடக்கிறது.விழா ஏற்பாடுகளை உலகளந்த பெருமாள் கோவில் மடாதிபதி உ.வே.ஸ்ரீ தேகளீச ராமானுஜாச்சாரியார் சுவாமிகள் மேற்பார்வையில், தேவஸ்தான ஏஜென்ட் எஸ்.கிருஷ்ணன் தலைமையில் விழா குழுவினர்கள், உபயதாரர்கள், நகர முக்கிய பிரமுகர்கள் மற்றும் பக்தர்கள், பொதுமக்கள் செய்து வருகின்றனர்.