< Back
மாநில செய்திகள்
மதுராந்தகம் வேளாண் வட்டார அலுவலகத்தில் 50 சதவீத மானியத்துடன் விவசாயிகளுக்கு நெல் வகைகள்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

மதுராந்தகம் வேளாண் வட்டார அலுவலகத்தில் 50 சதவீத மானியத்துடன் விவசாயிகளுக்கு நெல் வகைகள்

தினத்தந்தி
|
9 Aug 2022 12:47 PM GMT

மதுராந்தகம் வேளாண் வட்டார அலுவலகத்தில் 50 சதவீத மானியத்துடன் விவசாயிகளுக்கு நெல் வகைகள் வழங்கப்படுகின்றன.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியத்தில் 58 ஊராட்சிகள் உள்ளன. இந்த பகுதி மக்களின் முக்கிய தொழிலாக விவசாயம் உள்ளது. விவசாயிகளிடம் பாரம்பரிய நெல்ரகங்களை பயிர் செய்ய ஊக்குவிக்கும் விதமாக, மானிய விலையில், அரசு சார்பில் நெல் விதைகள் வழங்கப்படுகின்றன. மதுராந்தகம் வேளாண் வட்டார அலுவலகத்தில், பாரம்பரிய நெல் விதைகளான தூயமல்லி, அறுபதாம் குறுவை, மாப்பிள்ளை சம்பா, செங்கல்பட்டு சிறுமணி என 4 வகையான நெல் விதைகள் வழங்கப்பட உள்ளது. ரூ.25 மதிப்புள்ள ஒரு கிலோ நெல் விதைகள் 50 சதவீதம் மானியத்தில் ரூ.12.50 வீதம் வழங்கப்படும். ஒரு விவசாயிக்கு 20 கிலோ மட்டும் வழங்கப்படுகிறது. தூய மல்லி, அறுபதாம் குருவை, மாப்பிள்ளை சம்பா தலா 200 கிலோவும், செங்கல்பட்டு சிறுமணி நெல் ரகம் 320 கிலோவும், மதுராந்தகம் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது.


தேவைப்படும் விவசாயிகள், ஆதார் அட்டை, நிலத்தின் பட்டா, அடங்கல் உள்ளிட்ட ஆவணங்களுடன், மதுராந்தகம் வேளாண் வட்டார அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.


முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் நெல்விதைகள் வழங்கப்பட உள்ளதாக வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்