< Back
மாநில செய்திகள்
ரூ.1¼ கோடி கடன் தகராறில் நெல்வியாபாரி கொலை - தி.மு.க. பிரமுகர் கைது
சென்னை
மாநில செய்திகள்

ரூ.1¼ கோடி கடன் தகராறில் நெல்வியாபாரி கொலை - தி.மு.க. பிரமுகர் கைது

தினத்தந்தி
|
20 May 2022 10:20 AM IST

ரூ.1¼ கோடி கடன் தகராறில் நெல்வியாபாரி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தி.மு.க. பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், ஒரத்தி அடுத்த அனந்தமங்கலம் சிவன் கோவில் குளத்தில் நேற்று முன்தினம் ஆண் உடல் கிடப்பதாக ஒரத்தி போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்த போலீசார், ஒரத்தி கிராமத்தைச் சேர்ந்த தி.மு.க. பிரமுகர் ரமேஷ் (வயது 45) என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், ரமேஷ் விவசாயிகளிடம் நெல்லை வாங்கி நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த நெல் வியாபாரி பட்டுராஜ் (55) என்பவருக்கு விற்பனை செய்து வந்துள்ளார். இந்த வியாபாரத்தில் பட்டுராஜ், ரூ.1 கோடியே 25 லட்சத்தை கொடுக்காமல் ஏமாற்றியதால் அவரை நெல்லையில் இருந்து வரவழைத்து, தனது கூட்டாளிகள் 2 பேருடன் சேர்ந்து பட்டுராஜை கொலை செய்து, உடலை குளத்தில் வீசியதாக ரமேஷ் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து ரமேசை கைது செய்த போலீசார், அவரது கூட்டாளிகள் 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்