< Back
மாநில செய்திகள்
நீடாமங்கலத்தில் இருந்து தென்காசிக்கு   அரவைக்காக 1,000 டன் நெல்
திருவாரூர்
மாநில செய்திகள்

நீடாமங்கலத்தில் இருந்து தென்காசிக்கு அரவைக்காக 1,000 டன் நெல்

தினத்தந்தி
|
12 Dec 2022 12:30 AM IST

நீடாமங்கலத்தில் இருந்து தென்காசிக்கு அரவைக்காக 1,000 டன் நெல் அனுப்பி வைக்கப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் இருந்து தென்காசிக்கு அரவைக்காக 1,000 டன் நெல்லை சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கும் பணி நேற்று நடந்தது. இதை முன்னிட்டு நீடாமங்கலம் அருகே உள்ள தெற்குநத்தம், ஆதனூர், இடையர்நத்தம், மூவாநல்லூர், அசேஷம் ஆகிய ஊர்களில் உள்ள திறந்தவெளி சேமிப்பு மையங்களில் இருப்பு வைக்கப்பட்ட 1,000 டன் எடை கொண்ட பொதுரக நெல் 78 லாரிகளில் நீடாமங்கலம் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. அவற்றை சுமைதூக்கும் தொழிலாளர்கள் சரக்கு ரெயிலின் 21 பெட்டிகளில் அடுக்கி வைத்தனர். இதனைத்தொடர்ந்து நெல் அரவைக்காக சரக்கு ரெயிலில் தென்காசிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்