< Back
மாநில செய்திகள்
திருவாரூர்
மாநில செய்திகள்
அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் அனுப்பி வைப்பு
|7 March 2023 12:30 AM IST
அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் அனுப்பி வைக்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் பேரளத்தில் இருந்து ஓசூருக்கு 2 ஆயிரம் டன் சன்னரக நெல் அரவைக்காக அனுப்பி வைக்கும் பணி நேற்று நடந்தது. இதை முன்னிட்டு நன்னிலம், குடவாசல் உள்ளிட்ட இடங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் லாரிகள் மூலம் பேரளம் ரெயில் நிலையத்திற்கு எடுத்துவரப்பட்டு கூலி தொழிலாளர்கள் மூலம் சரக்கு ரெயிலில் 42 வேகன்களில் ஏற்றப்பட்டது. அதன் பின்பு சரக்கு ரெயில் 2 ஆயிரம் டன் நெல்லுடன் ஓசூருக்கு புறப்பட்டு சென்றது.