< Back
மாநில செய்திகள்
அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல்
திருவாரூர்
மாநில செய்திகள்

அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல்

தினத்தந்தி
|
28 Oct 2022 12:15 AM IST

அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் அனுப்பி வைக்கப்பட்டது

காவிரி டெல்டா மாவட்டங்களில் ஒன்றான திருவாரூர் மாவட்டத்தில் அதிக பரப்பளவில் நெல் விளைவிக்கப்படுகிறது. இங்கிருந்து உற்பத்தியாகும் நெல் சேமிப்பு கிடங்களில் இருப்பு வைக்கப்பட்டு, அரவைக்காக வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதற்கான பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் இருந்து புதுக்கோட்டைக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் அனுப்பி வைக்கும் பணி நடந்தது. இதை முன்னிட்டு நீடாமங்கலம், மன்னார்குடி, கூத்தாநல்லூர் ஆகிய தாலுகாக்களில் இயங்கிவரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட மற்றும் பாமணி மத்திய சேமிப்புக்கிடங்கு, அசேஷம், தெற்குநத்தம், எடையர்நத்தம் ஆகிய ஊர்களில் உள்ள திறந்தவெளி சேமிப்பு மையங்களில் இருப்பு வைக்கப்பட்ட 2 ஆயிரம் டன் பொதுரக நெல் 157 லாரிகளில் நீடாமங்கலம் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. இந்த நெல் மூட்டைகளை சுமைதூக்கும் தொழிலாளர்கள் சரக்கு ரெயிலின் 42 பெட்டிகளில் அடுக்கி வைத்தனர். இதனை தொடர்ந்து நெல் அரவைக்காக புதுக்கோட்டைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்