< Back
மாநில செய்திகள்
நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
தேனி
மாநில செய்திகள்

நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

தினத்தந்தி
|
7 April 2023 12:30 AM IST

கம்பத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.

தேனி மாவட்டத்தில் முல்லைப்பெரியாறு அணை மூலம் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலப்பரப்பில் இருபோக நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு முதல் போக சாகுபடி பணிகள் நிறைவடைந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் 2-ம் போக சாகுபடி பணிகள் முடிந்தது. தற்போது அண்ணாபுரம், சின்னவாய்க்கால் பகுதிகளில் எந்திரங்கள் மூலம் நெல் அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நெல் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கும் வகையில் கம்பம் பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று கம்பம் ஒழுங்கு முறை விற்பனை கூடம் வளாகத்தில் தற்காலிக நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், நெல் கொள் முதல் நிலையத்தில் 100 கிலோ எடை கொண்ட கிரேடு ரக நெல் மூட்டைகளுக்கு ரூ.2 ஆயிரத்து 160-ம், பொதுரக நெல் மூட்டைகளுக்கு ரூ.2 ஆயிரத்து 115-ம் விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்யப்படுகிறது. 24 மணி நேரத்தில் விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும். விவசாயிகளிடம் இருந்து எந்தவொரு சேவை கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்