< Back
மாநில செய்திகள்
நெல் சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி
திருவாரூர்
மாநில செய்திகள்

நெல் சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி

தினத்தந்தி
|
19 July 2023 7:15 PM GMT

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நெல் சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி நடந்தது.

நீடாமங்கலம்;

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் குறுவை சாகுபடி தொழில்நுட்பம் தொடர்பாக நெல்லில் அறுவடை பின்சார் தொழில்நுட்பங்கள் பற்றிய பயிற்சி நடைபெற்றது. பயிற்சியை இணை பேராசிரியர் (பயிர் பெருக்கம்) அருள்செல்வி தொடங்கி வைத்தார். திருவாரூர் மாவட்ட ஊராட்சி தலைவர் பாலசுப்பிரமணியன் கலந்து பேசினார். அப்போது அவர், விவசாயம் செழிக்க அனைத்து விஞ்ஞான பூர்வமான தொழில்நுட்பங்களை கற்று அதை பின்பற்ற வேண்டும் என கூறினார்.திருவாரூர் மாவட்ட நபார்டு வங்கியின் மேலாளர் விஸ்வந்த் கண்ணா உணவு பதப்படுத்துதல் மற்றும் சந்தைப்படுத்துதலின் முக்கியத்துவம் குறித்து விளக்கம் அளித்தார். நெல்லில் அறுவடை பின் சார் தொழில்நுட்பங்கள் குறித்து திட்ட உதவியாளர் ரேகா பேசினார்.பயிற்சியில் பாரம்பரிய நெல் ரகங்கள், வேளாண் இடு பொருட்கள், வேளாண்மை கருவிகள் அடங்கிய மற்றும் தொழில்நுட்பங்கள் அடங்கிய கருத்துக்காட்சி விவசாயிகளின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகள் அனைவருக்கும் நெல் நுண்ணூட்ட கலவை, உயிர் உரங்கள், வயல் நீர் குழாய் போன்ற பல இடு்பொருட்கள் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்