விருதுநகர்
மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்கள்
|காரியாபட்டி அருகே மழைநீரில் நெற்பயிர்கள் மூழ்கின.
காரியாபட்டி,
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகா கம்பிக்குடி, பாப்பணம், அல்லாளப்பேரி, மரைக்குளம், சூரனூர், செட்டிகுளம், எஸ்.கடமங்குளம், சத்திரபுளியங்குளம், மேலக்கள்ளங்குளம், முஷ்டக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 700 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் பாப்பணம் கிராமத்தில் மழை பெய்தது. இந்த நீர் வழிய வடியின்றி 200 ஏக்கருக்கும் மேற்பட்ட வயல்களில் மழைநீர் தேங்கியது. இதனால் நெல் பயிர்களை அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வயலில் மழை நீர் தேங்கி ஈரப்பதம் அதிகமாக இருப்பதால், அறுவடை ெசய்ய முடியாத நிைலயும் உள்ளது. அதே நேரத்தில் பயிர்கள் நிலத்தில் சாய்ந்துள்ளதால், நெற்கதிர்கள் முளைக்கும் நிலையும் உள்ளது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். எனவே விவசாயிகளின் நலன் கருதி அரசு அதிகாரிகள் மழைநீரில் மூழ்கிய நெல் பயிர்களை ஆய்வு செய்து தகுந்த நிவாரண தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.