< Back
மாநில செய்திகள்
தஞ்சாவூரில் இருந்து ரெயில் மூலம் நெல் மூட்டைகள் தர்மபுரி வந்தது
தர்மபுரி
மாநில செய்திகள்

தஞ்சாவூரில் இருந்து ரெயில் மூலம் நெல் மூட்டைகள் தர்மபுரி வந்தது

தினத்தந்தி
|
27 Feb 2023 1:00 AM IST

தஞ்சாவூரில் இருந்து சரக்கு ரெயில் மூலம் தர்மபுரி ரெயில் நிலையத்திற்கு 2 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் வந்தன. 42 பெட்டகங்களில் வந்த நெல் மூட்டைகளை லாரிகள் மூலம் கலெக்டர் பங்களா பின்புறம் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக திறந்தவெளி குடோனுக்கு ஏற்றி சென்றனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், நடப்பாண்டில் தஞ்சாவூரில் இருந்து இப்போது தான் நெல் வந்துள்ளது. இனி படிப்படியாக டெல்டா மாவட்டத்தில் இருந்து நெல் வரத்து இருக்கும். தர்மபுரிக்கு வரும் நெல் மூட்டைகள் தனியார் அரவை ஆலைகளில் அரவை செய்து பச்சரிசியாக தயாரித்து பொதுவிநியோகதிட்டத்தின் கிழ் பொதுமக்களுக்கு வழங்கப்படும்என்றனா்.

மேலும் செய்திகள்