< Back
மாநில செய்திகள்
திருப்பத்தூர் வழியாக பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரை
சிவகங்கை
மாநில செய்திகள்

திருப்பத்தூர் வழியாக பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரை

தினத்தந்தி
|
30 Jan 2023 12:15 AM IST

திருப்பத்தூர் வழியாக பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரை சென்றனா்.

திருப்பத்தூர்,

மணச்சை பாளையநாட்டார் காவடி குழுவினர் 45-ம் ஆண்டு காவடி பாதயாத்திரையை குன்றக்குடியில் இருந்து நேற்று வேல் பூஜை முடித்து தொடங்கினர். குருசாமி முருகுசோலை, சண்முக சேவா சங்கத் தலைவர் துரைசிங்கம் தலைமையில் பயணத்தை தொடங்கினர். பள்ளத்தூர், நேமத்தான்பட்டி, கானாடுகாத்தான், கொத்தரி, மணச்சை, வடகுடி, கரியபட்டி, கண்டனூர், பாளையூர், வேலங்குடி, கோட்டையூர், காரைக்குடி, கழனிவாசல், ஓ.சிறுவயல் பகுதியை சேர்ந்த 177 பேர் மயில்காவடி சுமந்து செல்கின்றனர். காவடிகள் நேற்று காலை 10 மணியளவில் திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவிலை வந்தடைந்து அங்கு வழிபாட்டிற்கு பின் காரையூர் வந்தடைந்த காவடிகளுக்கு பெண்கள் குலவையிட்டு ஆராத்தி எடுத்து வரவேற்றனர். பின்னர் அன்னதானம் நடைபெற்றது. இதை தொடர்ந்து மாலை 5 மணியளவில் காவடிகள் புறப்பட்டு மருதிப்பட்டியை அடைந்தது.

தொடர்ந்து சிங்கம்புணரி, சமுத்திராபட்டி, திண்டுக்கல் வழியாக வருகிற 3-ந் தேதி பழனியை அடைந்து பழனி சண்முகசேவா சங்க மடத்தில் மகேஸ்வர பூஜை, காவடிபூஜை, அன்னதானம் முடித்து தைப்பூச மறுநாள் அன்று மலையேறி சாமிதரிசனம் மேற்கொள்ள உள்ளனர்.

மேலும் செய்திகள்