< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
பச்சையப்பன் கல்லூரி உதவி பேராசிரியர் நியமன விவகாரம்; முதல்-அமைச்சருடன் ஆலோசித்து நடவடிக்கை - அமைச்சர் பொன்முடி தகவல்
|23 Nov 2022 11:33 PM IST
அடுத்த கல்வியாண்டில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சென்னை,
மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கக்கூடிய 13 பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மற்றும் பதிவாளர்களுடன் தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று சென்னையில் ஆலோசனை நடத்தினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அமைச்சர் பொன்முடி, அடுத்த கல்வியாண்டில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் நான் முதல்வன் திட்டத்தின் அடிப்படையில் பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்படும் என்றார். மேலும் பச்சையப்பன் கல்லூரி உதவி பேராசிரியர் நியமன விவகாரத்தில், முதல்-அமைச்சருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.