< Back
மாநில செய்திகள்
மதுரை
மாநில செய்திகள்
பா.ஜனதா தெருமுனை பிரசாரம்
|11 Jun 2023 2:11 AM IST
பாலமேட்டில் பா.ஜனதா தெருமுனை பிரசாரம் நடந்தது.
அலங்காநல்லூர்,
பிரதமர் நரேந்திரமோடியின் 9 ஆண்டு கால மத்திய அரசின் சாதனைகள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைப்பதற்காக பாலமேட்டில் பா.ஜனதா சார்பில் தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் தங்கத்துரை தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் கோசபெருமாள், மாவட்ட துணை தலைவர் கோவிந்தமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய துணைத்தலைவர் மறவபட்டி மாரிசெல்வம் வரவேற்றார். மகளிர் அணி நிர்வாகிகள் சித்ரா, பூமா, சமயநல்லூர் மண்டல் தலைவர் முத்துப்பாண்டி, அலங்காநல்லூர் வடக்கு மண்டல் நிர்வாகிகள் முத்து குமரன், கண்ணன், மலைச்சாமி, தவம்சாமி, கஜேந்திரன், தங்கராஜ், ராஜசேகரன், ஆதிலட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நிர்வாகி செல்லப்பாண்டி நன்றி கூறினார்.