< Back
மாநில செய்திகள்
அய்யலூர் அருகே எருது விடும் விழா
திண்டுக்கல்
மாநில செய்திகள்

அய்யலூர் அருகே எருது விடும் விழா

தினத்தந்தி
|
13 Sep 2022 5:11 PM GMT

அய்யலூர் அருகே பஞ்சந்தாங்கியில் கோவில் திருவிழாவையொட்டி எருது விடும் விழா நடைபெற்றது.

அய்யலூர் அருகே பஞ்சந்தாங்கியில் உள்ள புலிக்குத்தி தாத்தையாசாமி கோவிலில் மாலை கும்பிடு விழா நடைபெற்றது. இதையொட்டி நேற்று இரவு கோவிலில் தேவராட்டம், சேர்வை ஆட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மந்தையர்களின் எருது மாடு அழைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்தநிலையில் இன்று காலை பக்தர்கள் கோவிலில் பொங்கல் வைத்து, கிடா வெட்டி நேர்த்திக்கடனை செலுத்தினர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதன்பிறகு எருது விடும் விழா நடைபெற்றது. இதில், அய்யலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த 50 காளைகள் பங்கேற்றன. இந்த காளைகள் கோவிலில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு அழைத்து செல்லப்பட்டது.

பின்னர் அங்கிருந்து கோவில் வரை காளைகளை ஓடவிட்டனர். அதில் முதலில் ஓடி வந்த காளைக்கு பரிசு வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பஞ்சந்தாங்கி கிராம மக்கள் மேற்கொண்டனர்.


மேலும் செய்திகள்