உரிமை வேறு; கூட்டணி நிலைப்பாடு வேறு - திருமாவளவன் பேட்டி
|பார்முலா-4 கார் பந்தயம் தொழில் முதலீட்டாளர்களை ஈர்க்கும் என்று திருமாவளவன் கூறினார்.
புதுச்சேரி,
புதுச்சேரியில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு ரூ.100 நாணயம் வெளியீட்டு விழாவிற்கு பின்பு திமுக-விசிக இடையே விரிசல் விழாதா என்று ஏங்கி இருப்பவர்கள் வதந்தி பரப்புகிறார்கள். விசிக அங்கம் வகிக்கும் திமுக கூட்டணி கட்டுக்கோப்பாக உள்ளது. எங்களின் உரிமைகள் தொடர்பாக நாங்கள் எழுப்புகிற குரல் வேறு; கூட்டணி தொடர்பாக நாங்கள் கொண்டுள்ள நிலைப்பாடு வேறு. இந்த வதந்தி எங்கள் கூட்டணியை பாதிக்காது.
சென்னையில் விளையாட்டுத்துறை சார்பில் நடைபெறும் பார்முலா-4 கார் பந்தயம் சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும் ஒரு வாய்ப்பாக உள்ளது. தொழில் முதலீட்டாளர்களை தமிழ்நாட்டை நோக்கி ஈர்ப்பதற்கு ஏதுவாக அமையும். மும்பை, டெல்லி, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவதால் அங்கு தொழில் முதலீடுகள் பெருகுகின்றன; நல்ல எண்ணத்தோடு மேற்கொள்ளப்படும் முயற்சி என்பதால், நீதிமன்றமும் போட்டியை நடத்தலாம் என தீர்ப்பளித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து தங்கலானை பாராட்டாதது ஏன்? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு "படத்த பாத்த பிறகுதானே பாராட்ட முடியும்" என விசிக தலைவர் திருமாவளவன் பதில் அளித்தார்.