< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்
நடுரோட்டில் கவிழ்ந்த ஆட்டோ; 8 பெண்கள் காயம்
|2 Jun 2022 11:01 PM IST
சங்கராபுரம் அருகே நடுரோட்டில் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் 8 பெண்கள் காயமடைந்தனா்.
சங்கராபுரம்:
சங்கராபுரம் அருகே உள்ள சோழம்பட்டு கிராமத்தை சேர்ந்த 8 பெண்கள் இன்று சமத்துவபுரம் பகுதிக்கு விவசாய கூலி வேலைக்கு சென்றனர். அங்கு வேலை முடிந்ததும் 8 பேரும் ஒரு ஆட்டோவில் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். இந்த ஆட்டோ நெடுமானுர் பால் கூட்டுறவு சங்கம் அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ நடுரோட்டில் கவிழ்ந்தது. இதில் சோழம்பட்டு கிராமத்தை சேர்ந்த மரிகிறித்தால்(வயது 53), சகாயமேரி (45), கு.ஆரோக்கியமேரி (45), விஜயா (60), எலிசபெத் மேரி (48), ஆ.ஆரோக்கியமேரி (45), மரியசெல்வம் (40), சம்மனமேரி (38) ஆகியோர் காயமடைந்தனர். இவர்கள் சங்கராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக சங்கராபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.